சரியாய் 50 விநாடிகள் மட்டுமே நேரம்..!! அதற்குள் ஒரு சிறிய பாடலின் மூலம் காதலன் – காதலி உள்ளத்தில் பறக்கும் பட்டாம்பூச்சிகளை ரசிகனுக்கு உயிர்ப்புடன் காட்டவேண்டும்.. இசைஞானிக்கு இது பெரிய விஷயமா?
“சிறகை விரித்துப் பறக்கப் பறக்கத்
துடிக்குதொரு குயில்!!
மனதைத் திறந்து பாட்டுப் பாடத்
தவிக்குதொரு குயில்!!”
“சிறகை விரித்துப் பறக்கப் பறக்கத்
துடிக்குதொரு குயில்!!
மனதைத் திறந்து பாட்டுப் பாடத்
தவிக்குதொரு குயில்!!”
”இரு குயிலும் தனிமையிலே
இணைவதற்கு தடையுமில்லே
இரண்டும் இங்குத் தவித்துத் தவித்துத்
துடிப்பதேனடியோ?”