Monday, March 19, 2012

Raajaphonic FB Group Meet

Facebook Raajaphonic குழுவின் சார்பில் இசைஞானியுடன் நீண்டகாலமாக இசைத்து வரும் வயலினிஸ்ட் திரு. பிரபாகர் மற்றும் வயலினிஸ்ட் திரு. ஜெயமாணிக்கம் ஆகியோருடன் சென்னையில் மார்ச் 18ம் தேதி அன்று ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திரு. பிரபாகர் அவர்கள் இசைஞானியுடன் வேலை செய்யும் அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்துகொண்டார். அவற்றில் இருந்து சில துளிகள்:

  • அன்னக்கிளி வெளிவரும் முன், இசைஞானியும் அவரது சகோதரர்களும் இணைந்து ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவை நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் இருந்தே இசைஞானியுடன் இசைத்து வருகிறேன்.  திரைப்படங்கள் அல்லாது பல்வேறு கச்சேரிகளிலும், நாடகங்களிலும் நாங்கள் இணைந்து இசைத்திருக்கிறோம்.


  • தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் Recording Bombay’ல் உள்ள Bombay Film Lab என்ற Recording Theatre’ல் நடைபெற்றது.  பாடலுக்குக் கிட்டத்தட்ட 40 Violin, 4 Double Bass, 3 Trombone வரை உபயோகித்திருந்தார். Trumpet வாசிப்பவர்கள் கிடைக்காததால் Heavy Brass உபயோகித்தார். பாடலுக்கு Tuba வாசிப்பதற்காக Bombay Navy Band’ல் இருந்து இசைக்கலைஞர்கள் வந்திருந்து இசைத்தனர்.  ’சுந்தரி கண்ணால்’, ‘ராக்கம்மா’ ஆகிய பாடல்களுக்கு இசைஞானி Full Score எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் அரை மணி நேரம் மட்டுமே.  ஆனால் ஒவ்வொரு பாடலுக்கான ரெக்கார்டிங் 3 முதல் 4 நாட்கள் நடந்தது.  முதல் நாள் Keyboard, இரண்டாவது நாள் மற்ற Instruments, Chorus எல்லாம் Mix செய்தார்கள். அடுத்த நாள் Strings Section அதற்கடுத்த நாள் Voices..! அங்கு 4 track recording செய்யுமளவிற்குத்தான் வசதி இருந்தது. ஆனால் நிறைய வாத்தியங்கள் இசைக்கவேண்டியிருந்ததால் நான்கு நான்கு Track’ஆக Overlap செய்து Recording செய்தனர்.  Strings Section Recording முடிந்தவுடன் 30 விநாடிகளுக்கு இசைக்கலைஞர்கள் யாரும் பேசவில்லை. அதன் பிறகு எழுந்து நின்று கைதட்டினர். ஏனென்றால் அந்த Sound, Composition மற்றும் Arrangement அவர்களுக்கு மிகவும் புதிது.


  • என்னுடைய Personal Experience’ல் நான் மிகவும் ரசித்தது ‘ரமணா’ படத்தின் Rerecording..! Magnificent Scoring..! உங்களிடம் சொல்லும்போதே எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது (சிரிப்பு).  ரெக்கார்டிங் முடிந்த அன்று இசைஞானிக்கு நான் ஃபோன் செய்து ’மிகப் பிரமாதமாக இருந்தது’ என்று கூறினேன்.  சிரித்தார். அதே போல் Pandavas என்று ஒரு Animation Movie. அதற்கும் மிக மிக Extra ordinary Rerecording. அதே போல் சமீபத்தில் ‘Who is Afraid of Virginia Woolf?’ என்ற Play’க்கு எழுதிய Score’ம் பிரமாதமாக இருந்தது. We enjoyed playing that.

  • 80களின் இறுதியில் (கரகாட்டக்காரன், நாயகன் போன்ற படங்களுக்கு இசையமைத்த நேரத்தில்) நாங்கள் காலையில் ஸ்டுடியோவிற்கு வந்தால் இரவுதான் வீட்டுக்குச் செல்வோம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழும்பி 7 மணிக்கு ஸ்டுடியோவிற்கு வரவேண்டும்.  மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரை உணவு இடைவேளை. அந்த சமயத்தில் சிலர் ஓய்வு எடுப்பார்கள். Relax செய்வார்கள். ஆனால் கடந்த முப்பத்தைந்து வருடங்களில், அந்த நேரத்திலும் கூட இசைஞானி ஓய்வு எடுத்து  நான் பார்த்ததில்லை.  நோட்ஸ் எழுதுவார்.. அல்லது டைரக்டரிடம் பேசிக்கொண்டிருப்பார், அல்லது புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். 

  • பழசிராஜா’ ரீரெக்கார்டிங் சமயத்தில் நான் உடனிருந்தேன். அப்பொழுது ஒரு காட்சியைப் பார்ப்பார். பார்த்துக்கொண்டே என்னை ‘Bar Count பண்ணிக்கொண்டே வா’ என்றார். நான் 1…2..3…4.. என்று எண்ணிக்கொண்டே வந்தேன். ஒரு 2 நிமிடக் காட்சிக்கு Score ஒரு 125 முதல் 150 Bar’க்கு எழுத வேண்டும். Symphony Score’க்கு என்று தனியாக Score Sheet இருக்கிறது. அதில் Strings Section’ல் 1st Violin, 2nd Violin, Viola, Cello, Woodwinds Section’ல் Oboe, Clarinet, Flute… மற்றும் Brass Section’ல் Trumpet, Trombone, Tuba போன்ற கருவிகளுக்கு Score எழுத வேண்டும். இது போல பல பக்கங்களுக்கு எழுத வேண்டும். இவ்வளவு விஷயங்களுக்கு Score எழுதினாலும், ஒரு சின்ன அடித்தல் திருத்தல் கூட அவரது Score Sheet’ல் பார்க்க முடியாது.
 
  • ஸ்ரீராமராஜ்யம் படத்திற்கும் ஹங்கேரி இசைக்கலைஞர்கள் இசைத்திருந்தனர். பொதுவாக எழுதப்படும் Score’ஐ Photocopy எடுத்து மற்ற இசைக்கலைஞர்களுக்குக் கொடுப்பது வழக்கம். ஆனால் சின்ன சின்ன Pieces’க்கு அவர் எழுதும்போதே என்னையும் பார்த்து எழுதிக்கொள்ளச் சொல்லிவிடுவார். அவர் அருகில் நின்று நான் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது நான் கவனித்த ஒரு விஷயம்… ஒரு கவிதை எழுதவேண்டுமென்றால் முதலில் முதல் வரியை எழுத வேண்டும்.. அதன் பின்னர் இரண்டாவது வரி.. பின்னர் அடுத்த வரி என்று செல்லும்… அப்போதுதான் ஒரு Flow இருக்கும். யாரும் எடுத்த எடுப்பில் நான்காவது வரியை எழுத மாட்டார்கள். அதே போல் ஒரு Score எழுதும்போது முதலாவது Melody Line’ஐ எழுதுவார்கள். பின்னர் அதற்குத் தகுந்த மற்ற இசைக்கருவிகளுக்கு உரிய Score’ஐ எழுதுவார்கள்.  ஆனால் அவர் Score எழுதும்போது Score Sheet’ன் நான்காவது வரியில் இருக்கும் Cello’வுக்கு முதலில் எழுதுகிறார். அதன் பின்னர் Melody Line’ல் 5th Barக்கு எழுதுகிறார்.. பின்னர் Viola Portion’ன் 12th Bar’ல் எழுதுகிறார். பின்னர் வேறு ஒரு Instrument’க்கு எழுதுகிறார். அவர் வேகத்திற்கு என்னால் எழுத முடியவில்லை. அதைவிட ஆச்சரியம் ஒரு Melody Line தெரிந்தால்தான் அதற்குத் தகுந்த மற்ற Instruments’க்கு Score எழுத முடியும். Melody’ஏ எழுதாமல் எப்படி இவரால் மற்ற கருவிகளுக்கு எழுத முடிகிறது என்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். இதில் இன்னொரு சிறப்பு இவ்வளவு விஷயங்களையும் அவர் Keyboard’ஐத் தொடாமல் எழுதுகிறார். நான் ஒரு கட்டத்தில் அவரிடம் ’எப்படி இவ்வாறு எழுத முடிகிறது?’ என்று கேட்டேவிட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ‘நான் என்ன சொல்வது? அது அப்படித்தான் எனக்கு வந்து விழுகிறது’ என்றார்.
 
  • Italy Concert’க்காக நாங்கள் Prepare பண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட Piece’க்கு ‘3 in One’ என்று பெயர் கொடுத்திருந்தார். நாங்கள் Rehearsal’ல் வாசித்துப் பார்க்கும்போதுகூட எதற்காக ‘3 in One’ என்று பெயர் கொடுத்திருக்கிறார் என்று எங்களுக்கு விளங்கவில்லை. Italy சென்றபின்னர் மேடையில், ‘I want to tell you something about the reason behind naming this Piece ‘3 in One’.  It is because the entire melody is composed only in 3 Notes’ என்றார்.  அப்போதுதான் வாசிக்கும் எங்களுக்கே அது 3 ஸ்வரத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பது விளங்கியது.
 
  • Avatar படத்திற்கு இசையமைத்த James Horner, படம் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களுக்கு டைரக்டருடன் இருந்ததாகத் ஒரு இணையதளத்தில் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் பின்னணி இசைக்கென தனியாக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாராம். இசைஞானி 6 மாதங்களில் 6 படங்களின் ரீரெக்கார்டிங்கை முடித்துவிடுவார். அவரைப் போன்ற வேகத்தில் யாரும் Score எழுதி நான் பார்த்ததில்லை. கர்நாடிக் மற்றும் வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசையை முறைப்படிப் பயின்றிருப்பதால் எப்படி வேண்டுமானாலும் அவரால் இசையமைக்க முடியும். உதாரணத்திற்கு, ‘சிந்து பைரவி’ படத்தை Western Classical Background Score’உடன் செய்யவேண்டும் என்றாலும் செய்துவிடுவார். He is a master of Rerecording.
 
  • அவரிடம் நான் பார்த்து வியந்த மற்றொரு விஷயம் உண்டு.  ஒரு காலகட்டத்தில் வருடத்திற்கு 50 படங்களுக்கு மேல் இசையமைத்துக்கொண்டிருந்தார். அப்போதும் கூட காலை 7 to 1 கால்ஷீட்டில் ஒரு படத்திற்கு ரீரெக்கார்டிங் செய்வார். மதியம் மற்றொரு படம்.  முதல் படத்திற்கான இசை ஒரு Colour’ல் இருக்கும். மதியம் இசையமைக்கும் படத்திற்கான இசை முற்றிலும் வேறு வகையில் இருக்கும். மறுநாள் காலையில் மீண்டும் முதல் படத்திற்கு இசை. இப்போது முன்தினம் அந்தப் படத்திற்கு இசையமைத்த அதே Feel & Flavour மாறாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடருவார்.
 
  • இசைஞானியின் இந்த உயரத்திற்குக் காரணம் அவரது ஓய்வறியா உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு. அக்பர் பாஷா

புகைப்படங்கள் நன்றி: திரு. தினகர் ராஜாராம்.

6 comments:

  1. ஞானி. நம்மால் நினைத்துக்கூடபார்த்திடமுடியாதவளவற்கு மாமேதை. மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள். நிகழ்ச்சியையமைத்த அக்பர் பாஷா மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அழகாக பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி இ.ப.

    ReplyDelete
  2. Great work Danielji.This is great begining. For all Raja fans please support this Groups effort. Join a member in Raajaphonic in facebook.

    Thiyagarajan

    ReplyDelete
  3. http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_13.html
    ராஜாவின் பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்’

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி! இப்போதுதான் உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டேன். மிகப் பிரமாதம். இசைஞானியைப் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் ..! படித்து மகிழக் காத்திருக்கிறோம்.! :-)

      Delete