Monday, June 14, 2010

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு


பாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
படம் : மண் வாசனை
பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு!
பூத்திருச்சு வெக்கத்த விட்டு!
பேசிப்பேசி ராசியானதே!
மாமன் பேரச்சொல்லி சொல்லி ஆளானதே!
ரொம்ப நாளானதே!!

1. மாலையிடக் காத்து அல்லி இருக்கு!
தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு!
இது சாயங்காலமா? மடி சாயும் காலமா?
முல்லப் பூச்சூடு! மெல்ல பாய் போடு!
அட வாட காத்து சூடு ஏத்துது!! - பொத்தி வச்ச

2. ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்!
வெக்க நெறம் போக மஞ்சக்குளிச்சேன்!
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா?
இல்ல முதுகு தேய்க்கவா?
அது கூடாது! இது தாங்காது!
சின்னக் காம்பு தானே பூவத் தாங்குது! - பொத்தி வச்ச

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் இருக்கும் டீக்கடைகளில் எல்லாம் அப்பொழுது இந்தப் பாடல்தான். இசைஞானி இசைத்த இந்த Melody-ல் total தமிழ்நாடும் கிறங்கிக் கிடந்த நாட்கள் அவை!

1980கள்! தமிழக கிராமங்களில் வயதுக்கு வந்த ஒரு ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவதென்பது கூட மிகவும் Taboo ஆக பார்க்கப் பட்ட காலம் அது! அப்படி இருக்கையில் ‘மண் வாசனை’ மிகுந்த ஒரு குக்கிராமத்தில் தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை ஒரு ஆண் தனியே சந்தித்து பேசும்பொழுது எப்படி இருக்கும்? அப்பொழுது எழும் ஒரு “Having broken the Rule” thrill mood-ஐ இந்தப் பாடல் முழுவதும் இசைஞானி வார்த்து ஊற்றியிருப்பார்.

Rhythm எதுவும் இல்லாமல் ஒரு Solo Violin Piece உடன் ஆரம்பிக்கும் Prelude, Keyboard Bells, Flute, Bass Guitar என வகை வகையான வாத்தியங்களை கை பிடித்து அழைத்து வந்து Main Flute Piece ஆரம்பிக்கும் இடத்தில் Tabla Rhythm வந்தவுடன் விடைபெற்றுக் கொள்கிறது. [Prelude ஆரம்பித்த பத்தாவது வினாடியில் ஜோதியில் கலக்கும் Instrument-ன் பெயர் என்ன? Synth??].

பல்லவியில் “நாளானதே” என்ற எஸ்.ஜானகி பாடியவுடன் ஒரு “ஆஹாங்?” உடன் எஸ்.பி.பி. இணைந்து கொள்கின்றார். “ரொம்ப நாளானதே” பாடி முடிக்க, எஸ்.பி.பி.யின் தனது Trade Mark “ம்ஹூம்”… சிரிப்புடன் ‘பொத்தி வச்ச மல்லிகை’ பல்லவியில் ஐக்கியமாகிறார். பல்லவியில் நன்றாக கவனியுங்கள்! எஸ்.ஜானகி “மல்லிகை மொட்டு” என்று சுத்தத் தமிழில் பாடியிருப்பது ஒரு அழகென்றால், எஸ்.பி.பி. பேச்சுத் தமிழில் ‘மல்லிக மொட்டு’ என்று பாடியிருப்பது இன்னும் அழகு.

ஒரு கிராமத்து சூழலில் பாடப்படும் இந்தப் பாடல் இவ்வளவு Melodious ஆக ஆரம்பித்து அப்படியே சென்று கொண்டிருந்தால் எப்படி? ஒரு Rural Touch, மண்ணின் மணம் எங்கேனும் இருக்க வேண்டுமே? அது தானே இசைஞானியின் முத்திரை? முதல் பல்லவி முடிந்து வரும் 1st Interlude-ன் பிற்பகுதியில் இசைஞானி ஒலிக்க விட்டிருக்கும் நாகஸ்வரமும், மேளச் சத்தமும் பாடலின் Melody-ஐ, Flow-வை உடைக்காமல், ஒரு Village Effect-ஐக் கொடுத்து, சற்றே நம்மை கிராமத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பாடலில் வந்து விட்டுச் செல்லும்.

‘அட வாடக் காத்து சூடு ஏத்துது!’ என்று எஸ்.ஜானகி பாடி முதல் சரணத்தை முடித்து வைக்க, அதன் பின் Rhythm நின்று போய், பல்லவி ஆரம்பிக்கும் இடத்தில் அழகான தாளத்தில் கைத்தட்டல்கள்!! Rhythm நின்று போனதாலோ என்னவோ பின்னால் ஒலிக்கும் Bass Guitar-ம், Strings-ம் இன்னும் தெளிவாக, அழகாக ஒலிக்கின்றன. இரண்டாவது Interlude ஒரு Solo Flute உடன் துவங்க, அதனுடன் வரும் Keyboard Punches, Rhythm Section-ன் வேலையை எடுத்துக் கொள்கிறது. முத்தாய்ப்பாய் இதன் பின் வரும் பிரம்மாண்ட Violin Orchestration இசைஞானியின் Signature!!

இது ஒரு சாதாரண 3/4 Beat-ல் அமையப் பெற்ற பாடல் என்று யாராவது சொன்னாலோ அல்லது Rhythm என்ன என்று deliberate-ஆக கவனித்தாலோ தான் தெரியும். அப்படி அழகான ஒரு Rhythm Pattern-ஐ Tabla-வில் பின்னி இருப்பார் இசைஞானி.

ஜெயா டி.வி.யில் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒருமுறை Contestants பாடி முடிக்க, பத்மஸ்ரீ எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலைக் குறித்து, “இந்த மாதிரி ஒரு பாட்டு வேற யாராவது பண்ண முடியுமா? என்ன Orchestration-யா? I feel like Crying! என்ன ஒரு Composition? Orchestration? இளையராஜாவை வேறு யாரும் Touch பண்ணவே முடியாது!” என்று கூறினார். பாடல் பாடப்பட்ட முறை பற்றி அவர் விளக்கும்போது “பேசிப் பேசி ராசியானதே ஏ ஏ…” அந்த வரி முடியும் வரை முழுவதும் ஒரே மூச்சில் வர வேண்டும். இல்லன்னா பிரம்பால அடிப்பான் (இசைஞானி). அவன் ஒரு Headmaster மாதிரி!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு! பூத்திருச்சு வெக்கத்த விட்டு!” அடடா! “ஒரு பெண் பூப்பெய்தி விட்டாள்” என்ற fragile-ஆன செய்தியை கவிஞன் விவரிக்கும் அழகே அழகு. பாடலை எழுதிய வைரமுத்து அவர்கள் “இந்தப் பாடல் எழுதி முடித்த பின்னரே இசைஞானி இசையமைத்தார். இது மெட்டுக்கு எழுதப்பட்ட பாட்டு அல்ல! பாட்டுக்குப் போடப்பட்ட மெட்டு!” என்று கூறியதாக எதிலோ படித்த ஞாபகம்.

இசைஞானி பின்னர் இசையமைத்த “Aur Ek Prem Kahani” (இது ‘மண்வாசனை’-யின் Remake-ஆ என்று தெரியவில்லை) என்ற Hindi படத்திலும் இதே பாடலை உபயோகித்துள்ளார். “Hona Hai Tho Ho Bhi Jaayegaa” என்று துவங்கும் அந்தப் பாடலை ஹிந்தியில் எஸ்.பி.பி. அவர்களுடன் ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார்.

இனி Keyboard, Guitar வாசிப்பவர்களுக்காக. B Flat Minor Scale-ல் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் Chords Arrangement-ஐ (என் செவிகளுக்கு ஒலித்த வகையில்) கீழ்க்காண்க:-

/Bbm பொத்தி வச்ச /Fm மல்லிகை /Bbm மொட்டு!
/Bbm பூத்திருச்சு /Fm வெக்கத்த /Bbm விட்டு!
/Bbm பேசிப் /Ebm பேசி /C# ராசி /Ab யான/C# தே/ Ab!
/Bbm மாமன் /Ebm பேரச் /C# சொல்லி /Ab சொல்லி /C#ஆ/Abளான /Bbmதே!
ரொம்ப /C# நா /Ab ளான /Bbm தே!!

1. /Bbm மாலையிடக் காத்து /C# அல்லி இருக்கு!
/Bbm தாலி செய்ய நேத்து /C# சொல்லி இருக்கு!
/Ebm7 இது /Fசாயங் /F#கால /Bbmமா? /Ebm7மடி /Fசாயும் /F#கால/Bbmமா?
முல்லப் /Ebm7 பூச்சூ/Abடு! மெல்ல /Ebm7 பாய் போ/Abடு!
அட /Bbm வாட /Abகாத்து /F#சூடு /Fஏத்து/Fmது!!


இன்னும் Advanced Chords ஒலிப்பது உங்கள் செவிகளுக்குப் புலப்பட்டால் பின்னூட்டத்தில் (Comments) தெரிவிக்கவும். Keyboard Chords உங்களுக்காக இணைக்கப் பட்டுள்ளன.

பாடலின் ராகமும் கூட “சுத்த தன்யாசி” என்றது ஒரு தளம். Not at all! இது “ஹிந்தோளம்” என்றனர் வேறு சிலர். தெரிந்தவர்கள் விளக்குங்கள் ஐயா!!

வலைத்தளம் ஒன்றில் படித்த செய்தி ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் Symphony இசைப்பேழையை பிரதமர் Dr. மன்மோகன் சிங்-இடம் கொடுக்க இசைஞானியை அழைத்துச் சென்றார் திரு. வைகோ அவர்கள். அப்போது, 'Sir! இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று அவரை அறிமுகப்படுத்தினார் வைகோ. ‘இசைஞானி நம் கலாச்சாரத்தின் குரல்’!! எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

7 comments:

  1. மயக்கும் இந்த melody இசையில் கிறங்க இதெல்லாம் ஒரு காரணமா?

    ReplyDelete
    Replies
    1. 1000 முறை கேட்டாலும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தென்படும் பாடல்களுள் ஒன்றல்லவா இது? வருகைக்கு நன்றி! :-)

      Delete
  2. //இசைஞானி பின்னர் இசையமைத்த “Aur Ek Prem Kahani” (இது ‘மண்வாசனை’-யின் Remake-ஆ என்று தெரியவில்லை) என்ற Hindi படத்திலும் இதே பாடலை உபயோகித்துள்ளார். “Hona Hai Tho Ho Bhi Jaayegaa” என்று துவங்கும் அந்தப் பாடலை ஹிந்தியில் எஸ்.பி.பி. அவர்களுடன் ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார்//
    "Aur Ek Prem Kahani" பாலுமகேந்திரா இயக்குநராக அறிமுகமாகிய "கோகிலா" என்ற கன்னட படத்தின் ரீமேக்.மைக் மோகன் நடிகராக அறிமுகமாகிய முதல் படம்.அப்புறம் "Hona Hai Tho Ho Bhi" பாடலை பாடியவர் "எஸ்.பி.பி" அல்ல "மனோ"

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ? தகவலுக்கு நன்றி சகோதரர்..! :-)

      Delete
  3. உங்களை நம்பி ஒரு கிடார் வாங்கலாம் போலருக்கே?

    ReplyDelete
  4. thanks for your information i enjoyed

    ReplyDelete