Monday, June 7, 2010

காதலின் தீபம் ஒன்று

பாடல் : காதலின் தீபம் ஒன்று

படம் : தம்பிக்கு எந்த ஊரு?
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஆஹா ஆஹா ஆஹா ஹே ஹோ ஹூம்ம் ஹும்ம்ம்

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன? காதல் வாழ்க!!

1. நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆ… ஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்லவா? - காதலின்

2. என்னை நான் தேடித்தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும் ஆஆ… ஆஆ…
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா? - காதலின்

காதல் வயப்பட்டிருக்கிறீர்களா? காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறீர்களா? காதலியிடம் காதலைச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கிறீர்களா? காதலி சம்மதம் சொல்லிவிட்டாளா? அல்லது காதலி உங்கள் காதலை மறுத்து விட்டாளா? காதலி பிரிந்து சென்று விட்டாளா? காதலியுடன் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்ணோடு கண் நோக்க காதலில் லயித்தபடி அமர்ந்திருக்கிறீர்களா? காதலியுடன் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றி விட்டு, வீட்டில் வந்து படுத்து, விட்டத்தைப் பார்த்து அந்த நாளின் இனிய நிகழ்வுகளை மனதிற்குள் அசை போட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? காதலில் ஏதோ பிரச்சனை வந்து அவள் உங்கள் மடியில் படுத்து அழுது கொண்டு இருக்கிறாளா? அல்லது நீண்ட நாட்களாக அவளைப் பிரிந்து செல்ல நேரிட்டு அவள் நினைவில் வாடிக் கொண்டிருக்கிறீர்களா? எந்த Situationக்கும் பொருந்தும் இசைஞானியின் இந்த இனிய இசை மாலை. அத்தனை உணர்வுகளும் இந்த ஒரு பாடலில் அடக்கம்.

1st Interlude-ல் வரும் Flute piece-ன் மேல் இசைஞானி அமைத்திருக்கும் வயலின் Orchestration காதல் வயப்பட்டிருக்கிறவனை குஷிப்படுத்தும். காதலியைப் பிரிந்திருப்பவனை அமைதிப் படுத்தும். சரணம் முழுவதும் உடன் பயணிக்கும் வயலின்கள், ஒரு Uphill பயணத்தின் பொழுது முகத்தில் முத்தமிடும் மெல்லியப் பூங்காற்று.

இந்தப் பாடலின் ராகம் சாருகேசி [S R2 G3 M1 P D1 N2 S | S N2 D1 P M1 G3 R2 S] (தவறாயிருப்பின் மன்னிக்க). இதே ராகத்தில் இசைஞானி ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் இசையமைத்திருக்கும் ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடலும் கிட்டத்தட்ட இதே Feel-ஐக் கொடுக்கும். ஒரு அற்புதமான படைப்பை வர்ணிக்க “இப்படி ஒன்றைச் செய்ய இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்” என்று சொல்வார்கள். ஆனால் இப்படி ஒரு பாடலை Compose செய்ய இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது என்பது என் கருத்து.

2 comments:

  1. மிக்க நன்று

    ReplyDelete
  2. “இப்படி ஒன்றைச் செய்ய இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்” என்று சொல்வார்கள். ஆனால் இப்படி ஒரு பாடலை Compose செய்ய இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது" என்பது என் கருத்து.
    உண்மை தான், ஒவ்வொரு முறையும் புதுமையான அனுபவம் தரும் இந்த பாடலை கேட்டு உரையாடும் போது, தாங்கள் எழுதிய முதல் வசனம் என் கணவர் கூறியது , இரண்டாவது வசனம் என் கருத்து.

    ReplyDelete